திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஹிந்தி தேசிய மொழியா? - மம்தா பானர்ஜி பதில்!

ஹிந்தி தேசிய மொழியா? என்ற கேள்விக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:36 pm IST

ஹிந்தி தேசிய மொழியா? என்ற கேள்விக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

புது தில்லியில் ஏப்ரல் 7ல் நடைபெற்ற நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் பேசிய அமித் ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அப்போதே இதற்கு பலர் எதிர்வினை ஆற்றினர். தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் கிச்சா சுதீப் இடையே ட்விட்டரில் ஹிந்தி மொழி குறித்த விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த கருத்துகள் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'நமது நாடு பல்வேறு மொழிகளைக் கொண்ட பரந்த நாடு. இதைப் பற்றி நான் எதுவும் இப்போது சொல்லப் போவதில்லை, ஏனெனில் நான் மற்ற முதல்வர்களுடன் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவர்களுடன் விவாதித்து ஒரு கூட்டு முடிவு எடுக்கப்படும். 

மேலும் ஹிந்தி தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.