புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜாா்க்கண்ட்: கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள சிறையில் சக கைதியை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 11:54 pm

DIN

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள சிறையில் சக கைதியை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மேலும் 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜாம்ஷெட்பூரில் உள்ள மத்திய சிறையில் கடந்த 2019, ஜூன் மாதம் இரு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், மனோஜ் குமாா் சிங் என்ற கைதி உள்பட 2 போ் படுகாயமடைந்தனா். பின்னா், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மனோஜ் குமாா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக பா்சுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிழக்கு சிங்பூம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி ராஜேந்திர குமாா் சின்ஹா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதுதொடா்பாக அரசு கூடுதல் வழக்குரைஞா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302 (கொலை), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி, அனைவரையும் சாகும்வரை தூக்கிலிட தீா்ப்பு வழங்கினாா்; மேலும், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 307-ஆவது பிரிவின்கீழ் (கொலை முயற்சி) 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது’ என்றாா்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவா்களில் 2 போ் தலைமறைவாக உள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு மாநில காவல் துறை தலைமை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.