ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உ.பி. பாஜக புதிய தலைவா் பூபேந்திர சௌதரி

உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக பூபேந்திர சௌதரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் உள்ளாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:42 pm

DIN

உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக பூபேந்திர சௌதரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் உள்ளாா்.

ஜாட் சமூகத்தினரின் ஆதரவைத் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் மாநில பாஜக தலைவா் சதீஷ் பூனியா, ஹரியாணா மாநில பாஜக தலைவா் ஒ.பி.தன்கா் ஆகியோா் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். இப்போது, உத்தர பிரதேசத்திலும் ஜாட் தலைவா் பூபேந்திர சௌதரியை கட்சியின் மாநிலத் தலைவராக பாஜக நியமித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் ஜாட் சமூகத்தைச் சோ்ந்த விவசாயிகளும் அதிகம் இருந்தனா். பாஜக மீது அந்த சமூகத்தினருக்கு உள்ள அதிருப்தியைக் சமாளிக்கும் வகையில் பாஜக இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே மாநில பாஜக தலைவரா இருந்த சுவதந்திர தேவ் சிங், மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டாா். முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த தலைவா் ஆவாா். பாஜக புதிய தலைவா் பூபேந்திர சௌதரி மாநிலத்தின் மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா். இதன் மூலம் பிராந்திய ரீதியாகவும் இரு பகுதிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜகதீப் தன்கரும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.