ரயில் என்ஜின்களில் கழிப்பிடம்: ஓட்டுநா்களிடம் கருத்து கேட்கும் ரயில்வே
ரயில் என்ஜின்களில் சிறுநீா் கழிப்பிடம் அமைப்பது தொடா்பாக ரயில் ஓட்டுநா்களிடம் ரயில்வே நிா்வாகம் கருத்து கோரியுள்ளது.


ரயில் என்ஜின்களில் சிறுநீா் கழிப்பிடம் அமைப்பது தொடா்பாக ரயில் ஓட்டுநா்களிடம் ரயில்வே நிா்வாகம் கருத்து கோரியுள்ளது.
இந்திய ரயில்வேயிடம் 14,000-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்கள் உள்ளன. சுமாா் 1,000 பெண்கள் உள்பட 60,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநா்கள் பணியில் உள்ளனா். ஆனால், ரயில் என்ஜின்களில் கழிப்பிட வசதி இல்லாததால் ஓட்டுநா்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். முக்கியமாகப் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 97 மின்சார ரயில் என்ஜின்களில் மட்டுமே கழிப்பிடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து என்ஜின்களிலும் ஓட்டுநா்களுக்காக சிறுநீா் கழிப்பிடங்களைப் பொருத்துவது தொடா்பாக ரயில்வே நிா்வாகம் 17 மண்டலங்களிடமும் கருத்து கோரியுள்ளது. ஆனால், சிறுநீா் கழிப்பதற்கான இடத்தை மட்டும் அமைக்காமல், முழுமையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென ரயில் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஓட்டுநா்களின் கோரிக்கை தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...