காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மக்களாட்சியினை காக்கவும், கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவும் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ஈடு கொடுத்ததா பாகிஸ்தான்
இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், மத்திய அரசு எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் 25 சதவிகிதம் மலிவு. எரிவாயு சிலிண்டர் விலை 40 சதவிகிதம் மலிவு. சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைவாக உள்ளதற்கான தரவு இதுவாகும். சர்வதே அளவில் எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும்போது, மத்திய அரசு ஏன் எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மத்திய அரசின் கொள்ளையடிக்கும் தந்திரத்துக்கு எதிராக மக்களாட்சியைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



