ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குஜராத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59% வாக்குப்பதிவு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :5 டிசம்பர் 2022, 2:22 pm

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டுசெல்லப்பட்டன. 

குஜராத்திலுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதனைத் தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு இன்று (டிச.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 58.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.