புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

லாலுவின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த பிரதமர் மோடி!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். 

News image
Updated On :6 டிசம்பர் 2022, 10:31 am

DIN

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்த நிலையில் அண்மையில் சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றாா். அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 

லாலுவுக்கு அவரது மகள் ரோஹிணி ஆச்சாா்யா தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளாா். ரோஹிணியும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட பிரதமர் மோடி லாலு குறித்து நலம் விசாரித்தார். 

மாட்டுத் தீவன ஊழல் தொடா்பான பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.