'மகாராஜா எக்ஸ்பிரஸ்': டிக்கெட் விலை ரூ.19,00,000! 7 நாள்கள் பயணித்த இளைஞர்!

'மகாராஜா எக்ஸ்பிரஸ்' ரயிலில் இளைஞர் ஒருவர் ரூ.19 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
'மகாராஜா எக்ஸ்பிரஸ்': டிக்கெட் விலை ரூ.19,00,000! 7 நாள்கள் பயணித்த இளைஞர்!
Published on
Updated on
2 min read

'மகாராஜா எக்ஸ்பிரஸ்' ரயிலில் இளைஞர் ஒருவர் ரூ.19 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் மேற்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

அதிக விலையுயர்ந்த ரயில் சேவையை 'மகாராஜா எக்ஸ்பிரஸ்' மூலம் இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. இதில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஏதேனும் நான்கு வழித்தடங்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் டிக்கெட் விலைதான் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

நம்மில் பலர் ரயில்களில் பயணித்திருப்போம். இன்றும் அன்றாட வாழ்வில் பலர் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். பேருந்து, டாக்ஸி, விமானம் என மற்ற அனைத்து வகையான போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் டிக்கெட் விலை மிகவும் குறைவு என்பதே பலர், பலர் அதனைப் பயன்படுத்தக் காரணம்.

ஆனால், ரயில் பயணம் மற்ற விலையுயர்ந்த மற்ற பயணங்களுக்கு குறைந்ததல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் பயணம். இந்த ரயிலில் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.19 லட்சம் டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படுகிறது. 

இந்தியாவின் சுற்றுலாத் துறையை அடுத்தக்கட்டத்துக்கு மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகளை ஆடம்பர பயண அனுபவத்தின் மூலம் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச்செல்லும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

படிக்க ரயிலில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி! பிஎன்ஆர் எண் கேட்ட ரயில்வே!

இந்த ரயிலில் ஒவ்வொரு பணிக்கும் தனிநபர் சேவை வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு சொகுசு அறையுடன் கூடிய பயண அனுபவம் கொடுக்கப்படுகிறது. பயணிகளுக்கு தனி பார், குளிர்சாதன அறை, வைஃபை வசதி, லைவ் சேனல்கள், டிவிடி பிளேயர் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த ரயிலில் குஷாக்ரா என்ற இளைஞர், ரூ.19 லட்சம் கொடுத்து பயணித்து, அதனை விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்திய ரயில்வேயில் இதுபோன்ற ஒரு ஆடம்பர பயணத்தை அனுபவித்ததுண்டா? என பதிவிட்டு விடியோ பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த விடியோவில் பொதுமக்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ரயிலில் ஒரு நாள் பயணிப்பதற்கு பதிலாக ஒரு படுக்கையறை கொண்ட வீடை சொந்தமாக வாங்கியிருப்பேன் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

மற்றொரு நபர், ரயிலுக்கு டிக்கெட் எடுத்த பணத்தில் உலகம் முழுக்க பயணம் மேற்கொண்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com