கரோனா பயம்: 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த தாய், மகள்!

கரோனா பயம் காரணமாக 3 ஆண்டுகளாக தாய், மகள்  வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனா பயம் காரணமாக 3 ஆண்டுகளாக தாய், மகள்  வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காக்கிநாடா மாவட்டத்தின் கஜுலுரு மண்டலத்தில் உள்ள குய்யேரு கிராமத்தில் 43 வயதான கர்னீதி மணி மற்றும் அவரது 20 வயது மகள் துர்கா பவானி ஆகியோர் கரோனா பயம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறாமல் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தனர்

கர்னீதி மணியின் கணவர் சூரிபாபு, அவர்கள் இருவரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், உள்ளூர் பொது சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இருவரும் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

அர்னீதி மற்றும் பவானி இருவரும் கடந்த  மூன்று வருடங்களாக  ஒரே போர்வையில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

அர்னீதியின் கணவர் சூரிபாபுவின் கூற்றுப்படி, இருவரும் கரோனா பயம் மற்றும்  தங்களை யாரோ கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, சூரிபாபு வீட்டில் உணவு தயாரித்து பரிமாறி உள்ளார். அதன்பின், நான்கு மாதங்களாக, அவர்களுக்கு உணவு பரிமாறக் கூட சூரிபாபுக்கு அனுமதிக்கவில்லை. சூரிபாபு வேறு வீட்டில் தங்கி, உணவு தயாரித்து,  வீட்டின் ஜன்னலில் அவர்களுக்கு உணவளித்து உள்ளார்.

திங்கள்கிழமை மாலை, சூரிபாபு தனது மனைவி மற்றும் மகளின் உடல்நிலை மோசமடைந்து கருத்தில்கொண்டு உள்ளூர் பொது சுகாதார மையத்தை நாடி, மனைவி மற்றும் மகளை வெளியேற்றினார். அர்னீதி மற்றும் பவானி இருவருக்கும் மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சூரிபாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com