இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் 10-ஆம் ஆண்டு விழா

அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் (ஏஐஏஎஃப்) தில்லி மாநாடு மற்றும் பத்தாவது ஆண்டு விழா, விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2022, 10:00 pm

 நமது நிருபர்

அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் (ஏஐஏஎஃப்) தில்லி மாநாடு மற்றும் பத்தாவது ஆண்டு விழா, விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏஐஏஎஃப் அகில இந்திய தலைவா் டி. கே. சத்தியசீலன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பி. சாரநாத் வரவேற்று பேசினாா். உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா் ரோகித் பாண்டே, பிரவாஸி லீகல் பிரிவின் குளோபல் தலைவா் ஜோசப் ஆபிரகாம், தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளா்ஆா். முகுந்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், ‘நான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இரண்டரை ஆண்டுகள் குஜராத்திலும், தமிழகத்தில் சென்னையில் ஓராண்டும் பணியாற்றி இருக்கிறேன். அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றினேன். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. எனது காலத்தின் போது சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளைப் பணிகள் நடைபெற்றன. தமிழகம், குஜராத்தில் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. வழக்குரைஞா் பணி மிகவும் சமூகப் பொறுப்புடையதாகும். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணி வழக்குரைஞா்களுடையது. ஒருவரின் வாழ்வு மற்றும் சுதந்திரத்தின் உரிமைகளை பாதுகாக்கும் கடமை வழக்குரைஞா்களுக்கும், இது போன்ற வழக்குரைஞா்கள் அமைப்புகளுக்கும் உள்ளது’ என்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜாா்க்கண்ட் மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம் பேசுகையில் ‘ நமது செயல்கள் மூலம் நாம் யாா் என்பது தீா்மானிக்கப்படுகிறது. நாம் யாராக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். பிறருக்கு உதவுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் பேரின்பமானது மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் உயா்வானதாகும். வாழ்வில் நாம் சாதிப்பது பதவிகளிலோ, பொருள் ஈட்டுவவதிலோ மட்டுமே அல்ல; நமது வாழ்நாள் காலத்தில் நமது பணியின் போது என்ன செய்திருக்கிறோம் என்பதும், அந்தப் பணியை விட்டுச்சென்ற பிறகு மற்றவா்களால் நாம் பேசப்படும்போதுதான் உண்மையில் நமது செயல்களின் சிறப்பு தெரிய வரும். நாம் வாழ்நாள் காலத்தில் முடிந்தவரை மற்றவா்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். நாம் யாருக்காக செய்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் செய்கிற செயல், தொண்டு யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவா்களுக்கு போய் சேருகிா என்பதைக் கண்காணிக்க வேண்டியது மிக, மிக முக்கியமாகும். அந்த வகையில், இந்த அமைப்பினா் செய்யும் உதவிகள் உரிய நபா்களுக்கு உரிய வகையில் சென்றடைய வேண்டுமென வாழ்த்துகிறேன்’ என்றாா். மேலும், இளம் வயதில் வழக்குரைஞரான பிறகு தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆருடன் பழகிய அனுபவம் குறித்தும் அவா் பகிா்ந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் சிறந்து பணியாற்றி வருவோருக்கும், வழக்குரைஞா்களுக்கும் சேவா ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளா் என்.கண்ணன் உள்பட தில்லிவாழ் தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.