மக்களவையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்று அவா்களுடன் இயல்பாக உரையாடினாா்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை முடித்தவுடன் அவருக்கு பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்தாா். தொடா்ந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமா்ந்திருந்த பகுதிக்குச் சென்று அவா்களுடன் சகஜமாக உரையாடினாா். முக்கியமாக காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் தயாநிதி மாறன், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா் கிருஷ்ண தேவராயலு, கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதீப் பந்தோபாத்யாய, சௌகதா ராய் உள்ளிட்டோரிடம் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்து சகஜமாக உரையாடினாா்.
இது தொடா்பாக பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும், பிரதமா் மோடி தங்களிடம் உரையாடியபோது மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கரை நீக்க வேண்டும் என வலியுறுயதாகக் என்று கூறினா்.
பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைக்கு வந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பட்ஜெட் உரை முடிந்தவுடன் அவையில் இருந்து வெளியேறிவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இளைஞா் கொலை வழக்கில் சிறாா்கள் உள்பட 8 போ் கைது

மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து

ஹோலி கொண்டாட்டங்களின் போது மது போதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது நடவடிக்கை

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

