கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் மற்றும் சுகாதாரம் கிடைக்க உறுதியளிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கோவா மாநிலத்திற்கு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில், இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:
வரும் தேர்தலில் கோவா மக்கள், எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பெற முடியும். மேலும், இலவச மின்சாரம் மற்றும் இலவச சுகாதாரம் கிடைக்க உறுதியளிக்கிறேன்.
தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே கோவா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. கோவா வளர்ச்சிக்காக அவர்களிடத்தில் எந்த திட்டங்களும் இல்லை.
பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்கள் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணையத் தேவையில்லை. ஆனால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்.
ஏனெனில், கோவாவில் காங்கிரஸ் தலைவர்களின் மோசடிகளை மறைப்பதே பாஜகவின் வேலையாக இருக்கிறது. பாஜக 15 ஆண்டுகளும், காங்கிரஸ் 25 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளது. எனினும் கோவாவில் பல மோசடிகள் மட்டுமே நடந்துள்ளன.
எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்தால் விலைக்கு வாங்குவோம் என பாஜக வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. ஏனெனில் சிறிய கட்சிகள் பதவிக்கு வர முடியாது, வர மாட்டார்கள் என்று அவர்கள் தவறாக கணித்து விடுகிறார்கள் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


