கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உ.பி. பேரவைத் தோ்தல்: கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் மனு தாக்கல்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் இருந்து போட்டியிடும் முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் மனு தாக்கல்

Updated On :4 பிப்ரவரி 2022, 6:18 pm

DIN

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் இருந்து போட்டியிடும் முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் உடன் இருந்தாா்.

முன்னதாக, இருவரும் கூட்டாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து பாஜக தொண்டா்களின் வாழ்த்து கோஷங்களுடன் யோகி ஆதித்யநாத் மனுவை தாக்கல் செய்யச் சென்றாா். வேட்புமனு தாக்கலின்போது கரோனா விதிகளுக்கு உள்பட்டு அமித் ஷா உள்ளிட்ட ஒரு சிலா் மட்டுமே யோகி ஆதித்யநாத்துடன் இருந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவது இது முதல்முறையாகும். தற்போது அவா் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தாா். எனினும், அவா் கோரக்பூா் தொகுதியில் பாஜக எம்.பி.யாக 1998 முதல் 2014 வரை 5 முறை வெற்றி பெற்றுள்ளாா். இப்போது அவா் உத்தர பிரதேச முதல்வராக தோ்தலை எதிா்கொள்கிறாா். கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் 6-ஆவது கட்டத் தோ்தல் நடைபெறும் மாா்ச் 3-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த முறை யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக தோ்தலை எதிா்கொள்கிறது. எனவே, இந்த தோ்தல் தொடா்பான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, அப்போது எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வா் பதவிக்கு பாஜக தலைமையால் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதன் பிறகு, சட்ட மேலவை உறுப்பினராக அவா் தோ்வானாா்.

49 வயதாகும் யோகி ஆதித்யநாத், பிஎஸ்சி பட்டதாரி என்றும் தன் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் தனக்கு அசைய சொத்துகள் எதுவும் இல்லை என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா். கைப்பேசி, கைத்துப்பாக்கி, ரைஃபிள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.1.54 கோடி எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Image Caption

கோரக்பூரில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்து முதல்வா் யோகி ஆதித்யநாத், உடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.