'என்.டி.ஏ' அரசு என்றால் தரவுகள் இல்லா அரசு: ப.சிதம்பரம் சாடல்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தரவுகள் ஏதும் இல்லாத அரசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். 
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தரவுகள் ஏதும் இல்லாத அரசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். 

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கரோனா இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் மத்திய அரசை சாடியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் பேசுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸை 'துக்டே துக்டே கும்பல்'(சிறு சிறு கும்பல்கள்) என்று வசைபாடுகிறார். ஆனால், எதிர்க்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவரது அரசிடம் தரவுகள் இல்லை. 

கடந்த காலங்களில் அந்த சிறு சிறு கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என கேள்வி எழுப்பியபோது, தரவுகள் இல்லை என பாஜக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சரும் தெரிவித்தார். 

சிறு சிறு கும்பல்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள், நதிகளில் கிடக்கும் உடல்கள், புலம்பெயர்ந்தோர் சொந்த ஊர் திரும்பியது என எது பற்றிய தரவுகளும் இந்த அரசிடம் இல்லை. தரவுகள் ஏதும் இல்லாத அரசு இந்த அரசு NDA  (என்.டி.ஏ) அரசு என்றால்  'No Data Available'(தரவுகள் இல்லா) அரசு. 

காங்கிரஸ் இல்லாவிட்டால், இந்த மாளிகை இன்னும் இந்திய அரசுச் சட்டம் 1919-இன் கீழ் இளவரசர்களின் சபையாக இருந்திருக்கும், எங்களுக்குப் பதிலாக அதிகாரத்துவமிக்க ஆட்சியாளர்கள் அமர்ந்திருப்பார்கள்; ராணி இரண்டாம் எலிசபெத்தைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். மாநிலங்களவை என்ற ஒன்று இருப்பதால் நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் அமைப்புக்காக கடவுளுக்கு நன்றி.

எனக்கு இந்த பட்ஜெட்டில் மிகவும் பிடித்த விஷயம் குறைந்த நேரத்திலே பட்ஜெட் உரை முடிந்துவிட்டது. நிதியமைச்சருக்கு நன்றி. 5 ஆண்டுகளில் 12 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியெனில் ஆண்டுக்கு 12 லட்சம் வேலைவாய்ப்பு. ஆண்டுக்கு 47.5 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாக சேருகின்றனர். மற்றவர்கள் என்ன செய்வார்கள்? பக்கோடா வறுத்து விற்க வேண்டும். 

முதலீட்டைத் திரும்பப் பெறுவதில், இலக்கு ரூ. 1,75,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது சரியானது அல்ல என்று எச்சரித்திருந்தேன். எங்களின் எச்சரிக்கையை ஏற்று, இலக்குக்கு எதிராக ரூ.78,000 கோடியை மட்டுமே வசூலித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com