பகல் 1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63%, உத்தரகண்டில் 35.21 % வாக்குகள் பதிவு

பகல் 1 மணி நிலவரப்படி கோவாவில் 44.63%, உத்தரகண்டில் 35.21 % வாக்குகள் பதிவு

கோவா பேரவைத் தேர்தலில் ஒருமணி நிலவரப்படி 44.63% வாக்குகளும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 35.21 % வாக்குளும் பதிவாகியுள்ளன.

கோவா பேரவைத் தேர்தலில் ஒருமணி நிலவரப்படி 44.63% வாக்குகளும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 35.21 % வாக்குளும் பதிவாகியுள்ளன.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெறுகிறது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவா பேரவைத் தேர்தலில் ஒருமணி நிலவரப்படி 44.63% வாக்குகளும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் 35.21 % வாக்குளும் பதிவாகியுள்ளன. 

பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கோவா, உத்தரண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com