/

இந்தக் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு என்ன வேலை? குழப்பத்தில் இணையவாசிகள்

​தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-இன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடனான சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆ

News image
சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரே
Updated On :20 பிப்ரவரி 2022, 2:42 pm

DIN


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-இன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடனான சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை சென்றுள்ளார். அங்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து தனது குழுவினருடன் அங்கு மதிய உணவு அருந்தினார். உத்தவ் தாக்கரேவின் அலுவல் இல்லத்தில் சந்தித்ததால், அமைச்சர்களையும் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நடிகர் பிரகாஷ் ராஜ் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது.

கூட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் படத்திலும் நடிகர் பிரகாஷ் ராஜ் இருந்தார்.

இதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பிரகாஷ் ராஜ் உடனிருந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்த பேச்சுகள் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.

சரத் பவாருடனான சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ் கூறியதாவது:

"புதிய திட்டங்கள் மற்றும் கனவுகளுடன் இந்தியா முறையாக நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து சரத் பவாரிடம் பேசினேன். அவர் அனுபவம் வாய்ந்தவர். என்னை ஆசீர்வதித்தார். நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். விரைவில் ஒத்த சிந்தனையுடைய மற்ற கட்சிகளுடனான சந்திப்பும் நடைபெறும்."

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பது தொடர்பான கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் என்ன செய்கிறார் என்ற கேள்வி இணையவாசிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.