தில்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு
தில்லி சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்


தில்லி சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்அறிவிப்பின்றி, திடீர் ஆய்வு செய்த அவர், மருத்துவமனை நிர்வாகிகளுடனும், மருத்துவர்களுடனும் கலந்துரையாடினார்.
தில்லியில் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சாஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், நோயாளிகளுக்கு எந்த குறையும் இல்லாமல் சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...