ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காஷ்மீரில் பனிப்பொழிவு: 2வது நாளாக விமான சேவை பாதிப்பு

காஷ்மீரில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக  தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 8:14 am

DIN

காஷ்மீரில் நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக  தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் எந்த விமானப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. 

விமானநிலையத்தின் தெரிவுநிலை சுமார் 800 மீட்டராக இருந்தது. இதனால் விமானச் செயல்பாடுகளுக்குத் தேவையான தெரிவுநிலை குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனால், அனைத்து விமானங்களும் தாமதமாகின்றன. ஒருசில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெரிவுநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் விமானச் செயல்பாடுகள் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை தெரிவுநிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.