நாடு முழுவதும் இரண்டே மாதங்களில் 27 புலிகள் பலி

நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு கூட்டுறவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டே மாதங்களில் 27 புலிகள் பலி
நாட்டில் இரண்டே மாதங்களில் 27 புலிகள் பலி
Published on
Updated on
1 min read

நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனஉயிரின பாதுகாப்பு கூட்டுறவு தெரிவித்துள்ளது.

புலிகளின் இருப்பு என்பது வளமான காடு என்பதற்காக அளவீடாகும். பல்லுயிர் சூழலைக் காக்க புலிகளை பாதுகாப்பது அவசியம். புலிகளைக் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவற்றின் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்நிலையில் இந்திய வன உயிரின பாதுகாப்பு கூட்டுறவு எனும் அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 27 புலிகள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, “கடந்த 2 மாதங்களில் பலியான புலிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி இரண்டு நாள்களுக்கு ஒரு புலி இறந்துள்ளது. இது மோசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9 புலிகளும், மகாராஷ்டிரமில் 6 புலிகளும், 5 புலிகள் கர்நாடகத்திலும், கேரளம் மற்றும் அசாமில் தலா 2 புலிகளும், ராஜஸ்தான், ஆந்திரம், பிகாரில் தலா 1 புலியும் உயிரிழந்துள்ளன. மேலும் வேட்டையாடுதலினால் 7 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2012ஆம் ஆண்டு 88 புலிகளும், 2013ஆம் ஆண்டு 68 புலிகளும், 2014ஆம் ஆண்டு 78 புலிகளும், 2015ஆம் ஆண்டு 82 புலிகளும், 2016ஆம் ஆண்டு 121 புலிகளும், 2017ஆம் ஆண்டு 117 117, 2018ஆம் ஆண்டு 101 புலிகளும், 2019ஆம் ஆண்டு 96 புலிகளும், 2020ஆம் ஆண்டு 106 புலிகளும், 2021ஆம் ஆண்டு 127 புலிகளும் நாடு முழுவதும் பலியாகியுள்ளன.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் அதிகமான புலிகள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக உள்ளது. 100 சதுர அடிக்கு 14 புலிகள் அங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com