25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் திரண்ட சாதுக்கள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான  சாதுக்கள் குவிந்து வருகின்றனர். 

Published On :1 பிப்ரவரி 2024, 2:02 pm IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான  சாதுக்கள் குவிந்து வருகின்றனர். 

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பசுபதிநாத் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யுனெஸ்கோவின் உலகப் பராம்பரியத் தலம் மற்றும் இந்து பக்தர்களின் புனித யாத்திரைத் தலமான பசுபதிநாத் கோயிலின் வளாகத்தில், ராமர் கோயிலின் முகப்பில் சாதுக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகின்றது. 

சக்தி பீடங்களில் ஒன்றாக பசுபதிநாத் கோயில் கருதப்படுவதால், இந்த நாட்களில் இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் சாதுக்கள் வருகை தருகின்றனர். இந்தாண்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) மகா சிவராத்திரி வருவதால் நேபாளம் மற்றும் இந்தியாவிலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் நாளை மாலைக்குள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகளை பசுபதி வட்டார வளர்ச்சி அறக்கட்டளை செய்து வருகின்றது. 

சிவபெருமானின் இரவு என அழைக்கப்படும் "மகா சிவராத்திரி" நேபாளத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் இந்து மக்கள்தொகை கொண்ட அனைத்து நாடுகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.