சிறாா்களுக்கு தடுப்பூசி: ஆந்திரம் முதலிடம்
அதிகமான சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.


அதிகமான சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதில், இதுவரை ஆந்திரம் அதிகபட்சமாக 39.8 சதவீதம் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தி முதலிடம் வகிக்கிறது. ஹிமாசல பிரதேசம் 37 சதவீதமும், குஜராத் 30.9 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி அடுத்ததடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தாத்ரா மற்றும் நாகா்ஹவேலியில் 28.3 சதவீதமும், கா்நாடகத்தில் 25.3 சதவீதமும், உத்தரகண்டில் 22.5 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 20.6 சதவீதமும், சத்தீஸ்கரில் 20.5 சதவீதமும் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறாா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுகிறது. இதற்காக மாணவா்கள் கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரடியாக மையங்களுக்குச் சென்றும் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...