நாட்டில் ஒரு லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,17,100 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,17,100 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் நேற்று 90,928 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 30,836 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,71,363-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கரோனா உறுதியாகும் விகிதம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 149.66 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...