ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 6 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2022, 4:33 pm

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 9 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜக அறிவித்திருந்த நிலையில் புதன்கிழமை மேலும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்தது.

கடந்த முறை வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத முன்னாள் முதல்வா் பி.சி.கந்தூரியின் மகள் ரிது கந்தூரி பூஷணுக்கு கோட்வார் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி கடந்த முறை வெற்றி பெற்ற காட்டிமா தொகுதியிலும், மாநில பாஜக தலைவா் மதன் கெளசிக் ஹரித்வாா் தொகுதியிலும் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவில் பெரும்பாலான அமைச்சா்கள், எம்எல்ஏக்களுக்கு கடந்த முறை அவா்கள் வென்ற தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.