இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2022, 1:28 pm

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

இந்நிலையில், ஒரு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் சென்றுள்ளார். தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை அமிருதசரஸ் வந்த ராகுல் காந்தி, மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

Story image

இதையடுத்து, ஜலந்தா் செல்லும் ராகுல் காந்தி, இன்று மாலை காணொலி மூலமாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.