இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கடந்த 1950-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி இஸ்ரேலை தனிநாடாக இந்தியா அங்கீகரித்தது. எனினும் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதிதான் ராஜீய உறவு ஏற்பட்டது. இந்த உறவு அமைந்து சனிக்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட காணொலியில் கூறியதாவது:
இந்தியா-இஸ்ரேல் இடையிலான ராஜீய உறவின் 30 ஆண்டு காலம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு மக்களும் எப்போதும் சிறப்பான உறவைப் பகிா்ந்து வந்துள்ளனா்.
இதையும் படிக்க | பெகாஸஸ் மென்பொருளை இஸ்ரேலிடம் 2017-இல் வாங்கியது இந்தியா
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக யூத சமூகத்தினா் நல்லிணக்கச் சூழலில் வாழ்ந்து வளா்ச்சி கண்டுள்ளனா். இது இரு நாடுகளுக்கு இடையிலான வளா்ச்சிப் பாதையில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினமும், அடுத்த ஆண்டு இஸ்ரேலின் 75-ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கு புதிய இலக்குகளை உருவாக்க இதுவே சிறந்த தருணம் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் மேற்கொண்ட 2 பில்லியன் டாலா்கள் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அங்கமாக பெகாஸஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூ யாா்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ள நிலையில், பிரதமா் மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இளைஞா் கொலை வழக்கில் சிறாா்கள் உள்பட 8 போ் கைது

மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து

ஹோலி கொண்டாட்டங்களின் போது மது போதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது நடவடிக்கை

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

