தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசிய மகளிர் ஆணைய நாள்: பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்

30வது தேசிய மகளிர் ஆணைய நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2022, 2:06 pm

DIN

30வது தேசிய மகளிர் ஆணைய நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார். 

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ‘அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்’ என்கிற தலைப்பில் பிரதமர் பேசுகிறார்.

மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பெண் தொழில்முனைவோர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

மேலும் நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.