பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக உலக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலா், தனியாா் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலா் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.
சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலா் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியாா் துறை முதலீடு மூலம் நிரப்ப வளா்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலா் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு

25 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் ஏற்காடு எம்எல்ஏ அலுவலகம்!

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

