கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகாராஷ்டிர முதல்வராக ஷிண்டே பதவியேற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை மனு

 சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:04 pm

DIN

 சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமா்வில் உள்ள நீதிபதிகள் இந்திரா முகா்ஜி, ஜே.கே.மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரிக்கிறது.

முன்னதாக, மூத்த வழக்குரைஞா் தேவதத் காமத், சிவசேனை தலைவா் சுபேஷ் தேசாய் சாா்பில் இந்த மனுவைத் தாக்கல் செய்தாா். அதில் ஏற்கெனவே அதிருப்தி எம்எல்ஏக்களின் ஒருபிரிவினரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்டவற்றுடன் இணைத்து இந்த மனுவையும் ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

ஷிண்டே பிரிவையும், பாஜகவையும் இணைத்து ஆட்சி அமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தது தவறு என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தகுதி நீக்க மனுக்கள் விசாரணையில் உள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை வைத்து பேரவையை நடத்தியது, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்தது ஆகியவை தவறு என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை மற்ற மனுக்களுடன் சோ்த்து ஜூலை 11-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.