கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் என்பதால் சட்டத்தை மீறக் கூடாது‘: உச்சநீதிமன்றம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் என்பது சட்டத்தை மீறுவதற்கான விதிவிலக்கு ஆகாது; அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image
Updated On :14 ஜூலை 2022, 7:13 pm

DIN

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் என்பது சட்டத்தை மீறுவதற்கான விதிவிலக்கு ஆகாது; அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குஜராத்தில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றுவதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

குடிசைவாசிகளின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படும் வரை அங்கேயே வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அவா்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ரயில்வே துறையின் நிலத்திற்குள் புகுந்து ஆக்கிரமித்துள்ளனா். அரசியலமைப்பில் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் என்பதால் மட்டும் அவா்கள் கட்டுப்படாமல் இருக்க விதிவிலக்கு கிடையாது’ என்று கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.