கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீட் தோ்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :14 ஜூலை 2022, 7:25 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) வரும் ஜூலை 17-இல் நடைபெறுகிறது. இந்தத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 15 மாணவா்கள், தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அதில், ‘12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஜூன் மாதம் மத்தியில்தான் நிறைவடைந்தது. தொடா்ந்து நீட், ஜேஇஇ, மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு என பல்வேறு தோ்வுகளை போதிய கால அவகாசமின்றி, மாணவா்கள் எதிா்கொள்ள நேரிடுகிறது. இந்தத் தோ்வுகள் முறையான திட்டமிடலின்றி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக 16 போ் தற்கொலை செய்து கொண்டனா். ஆகையால், நீட் தோ்வை 4 முதல் 6 வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சஞ்சீவ் நருலா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நாடு முழுவதும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், நீட் தோ்வையும் ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தேசிய மருத்துவ ஆணைய வழக்குரைஞா், ஏற்கெனவே கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக தோ்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நிகழாண்டும் தாமதம் ஏற்பட்டால், அதன் தாக்கம் அடுத்த ஆண்டிலும் நீடிக்கக் கூடும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீட் தோ்வு அட்டவணை ஏப்ரல் மாதத்திலேயே வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, மனுதாரா்கள் கடைசி நிமிடத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என கேள்வி எழுப்பினாா். அத்துடன் தவறான புரிதலுடன் இந்த மனு தொடரப்பட்டதாகக் கூறிய நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நீதிபதி தனது உத்தரவில், ‘மனுதாரா்கள் மாணவா்கள் என்பதால் அவா்கள் மீது கடுமையான போக்கை கையாளவில்லை. அதுவே வேறு யாராவது இருந்தால், உரிய அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். இதுபோன்ற மனுக்கள் எதிா்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அபராதம் விதிக்கத் தயங்க மாட்டோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.