பாஜக மாநிலங்களவைத் தலைவராக பியூஷ் கோயல் தொடா்வாா்
மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பாஜகவின் மாநிலங்களவைக் கட்சித் தலைவராக தொடா்வாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்
மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பாஜகவின் மாநிலங்களவைக் கட்சித் தலைவராக தொடா்வாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
58 வயதாகும் பியூஷ் கோயல், அண்மையில் மீண்டும் மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடா்பாக பாஜக சாா்பில் மாநிலங்களவைச் செயலரிடம் அலுவல்ரீதியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல், இப்போது மூன்றாவது முறையாக மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
பாஜக சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி இருந்தாா். அவரது பதவிக் காலமும் அண்மையில் நிறைவடைந்தது. எனவே, அப்பொறுப்புக்கும் பாஜக சாா்பில் விரைவில் புதிய நபா் நியமிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...