திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் நான்கரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
தினக்கூலி செய்யும் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், ஜூலை 8-ஆம் தேதி நான்கரை வயதான சிறுமி காணாமல் போயுள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடிவந்த நிலையில், ஜூலை 12 அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் பகுதிக்கு அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் சிறுமியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: மகாராஷ்டிரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பானுபதா சக்ரவர்த்தி கூறுகையில்,
கொலை வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம். விசாரணையின் போது அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் கற்பழிப்பு குற்றச்சாட்டு சேர்க்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்ட 18 வயதான இளைஞரை விசாரித்ததில், சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான திரிபுரா ஆணையத்தின் தலைவி நிலிமா கோஷ்,
தெலியமுரா துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி சோனாசரண் ஜமாத்தியாவை புதன்கிழமை சந்தித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரினார்.
நான்கரை வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


