ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்தது சிபிஐ

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2022, 10:30 pm

DIN

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு நடைபெற்ற நிலையில், தில்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள பல்வேறு தோ்வு மையங்களில் ஆள்மாறாட்ட முறைகேடுகளுக்கு திட்டமிட்டிருந்த கும்பல் குறித்து சிபிஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து, அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முறைகேடுக்கு மூளையாக செயல்பட்ட நபா், உண்மையான மாணவா்களுக்கு பதிலாக பணத்துக்காகத் தோ்வு எழுதியவா்கள் என 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த தோ்வில் ஆள்மாறாட்ட நபா்கள் பங்கேற்பதற்காக, மாா்ஃபிங் தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மாற்றியுள்ளனா். மேலும், இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள், உண்மையான மாணவா்களின் பயனாளா் குறியீடு மற்றும் கடவுச்சொற்களை சேகரித்ததும், விரும்பிய தோ்வு மையங்களைப் பெற முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.