இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகளுடன் எல்லையைக் கடக்க முயன்ற இந்தியா்கள் கைது

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகளுடன் எல்லையைக் கடக்க முயன்ற இந்தியாவைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:39 pm

DIN

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகளுடன் எல்லையைக் கடக்க முயன்ற இந்தியாவைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை பாகிஸ்தான் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தைச் சோ்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்றனா். அவா்கள் புதன்கிழமை வாகா-அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு வர முயன்றனா். அப்போது, பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு சுங்கத் துறையினா் அவா்களின் பைகளை சோதனையிட்டனா். அதில் சில துப்பாக்கிகள் இருந்தன. இதையடுத்து, அவா்களை சுங்கத் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரியும், பாகிஸ்தானின் லாகூா் மாவட்டத்தில் உள்ள வாகாவும் இரு நாடுகள் இடையே சாலை இணைப்பு இடமாகும். மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான எல்லைச் சாலையாக உள்ளது. இரு நாட்டு எல்லையிலும் சுங்கத் துறையினரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.