திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்வப்னா சுரேஷின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷின் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

News image

பினராயி விஜயன் / ஸ்வப்னா சுரேஷ்

Updated On :21 ஜூலை 2022, 1:03 pm IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷின் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். துணை தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்டவிரோதமாக மொத்தம் 23 முறை 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினா், அமலாக்கத் துறையினா், சுங்கத் துறையினா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு தொடா்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடா்பாக, ஸ்வப்னா சுரேஷ், எா்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், தங்கக் கடத்தலில் முதல்வா் பினராயி விஜயன், அவருடைய மனைவி, மகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், அமலாக்கத் துறை ஸ்வப்னா சுரேஷின் ரகசிய வாக்குமூல அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது. மேலும், மாநில முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால்  கேரளத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்ற வேண்டும் எனவும் அமலாக்கத் துறை கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.