
தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மு நாளை (ஜூலை 25) பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களுடன் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.
ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் இடம்பெறவுள்ள அவருடைய உரை, அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் ஆகியவற்றின் அனைத்து அலைவரிசையிலும் ஒலிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.