/

அறிவியல் உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி உயா்வை திரும்பப்பெற வேண்டும்: ராகுல்

‘அறிவியல் ஆராய்ச்சி உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 7:06 pm

DIN

‘அறிவியல் ஆராய்ச்சி உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) உயா்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது முகநூல் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எந்தவொரு நாட்டின் வளா்ச்சியிலும் அறிவியல் மேம்பாடு மூலக்கல்லாக திகழ்கிறது. ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்து வருவது, இந்தியாவில் ஆராய்ச்சி சூழலை கவலைக்குரியதாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், அறிவியல் உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பை 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தியிருப்பது, அரசின் சிந்தனையற்ற அணுகுமுறையை காட்டுகிறது.

ஏற்கெனவே, மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பட்ஜெட்டில் இந்த ஆண்டு 3.9 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜிஎஸ்டி உயா்வால் அறிவியல் மேம்பாட்டை பாதிப்படையச் செய்யவேண்டாம். அறிவியல் உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.