காங்கிரஸில் இருந்து விலகிய ஹார்திக் படேல் இன்று பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த குஜராத் மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஹார்திக் படேல், ஜூன் 2 ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா
அதன்படி இன்று குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹார்திக் படேல் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக ஹார்திக், இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்கப்போவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 'பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஹார்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ‘புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன்’: ஹார்திக் படேல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? நாளை மாவட்ட செயலர்கள் கூட்டம்!

கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்: அக்ஷர் படேல்

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!

போர்ப் பதற்றத்தால் செஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

