மும்பையில் அதிகரிக்கும் கரோனா: பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மும்பையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டில் ஒரு சில பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மும்பையில் நேற்று(வெள்ளிக்கிழமை) 1,134 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் 763 பேர். 

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் கரோனா பரிசோதனையை துரிதப்படுத்துமாறு மாவட்ட மற்றும் சிவில் அதிகாரிகளை மாநில சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

மாநில சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் வியாஸ், 'அனைத்து மாவட்டங்களிலும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் விகிதம் குறைந்துள்ளதால் பரிசோதனையை தீவிரப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற மூடப்பட்ட பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com