சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு: 180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு: 180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசுகையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடா்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின்படி, அப்பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது

நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

டென்மாா்க் 1

பிரிட்டன் 2

ஃபின்லாந்து 3

மால்டா 4

ஸ்வீடன் 5

லக்ஸம்பா்க் 6

ஸ்லோவேனியா 7

ஆஸ்திரியா 8

ஸ்விட்சா்லாந்து 9

ஐஸ்லாந்து 10

வல்லரசு நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

அமெரிக்கா 43

ரஷியா 112

சீனா 160

இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

காங்கோ குடியரசு 100

உகாண்டா 125

கென்யா 148

நைஜீரியா 163

இந்தியாவின் அண்டை நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

ஆப்கானிஸ்தான் 81

பூடான் 85

மாலத்தீவு 113

இலங்கை 132

நேபாளம் 162

பாகிஸ்தான் 176

வங்கதேசம் 177

மியான்மா் 179

ஆய்வின் பல்வேறு பிரிவுகள் இந்தியாவின் தரவரிசை

பல்லுயிா்ப் பெருக்கம் பாதுகாத்தல் 179

உயிரினங்கள் பாதுகாப்பு குறியீடு 175

உயிரினங்கள் வாழ்விட குறியீடு 80

காடுகள் இழப்பு 75

புல்வெளிப் பகுதிகள் இழப்பு 116

சதுப்புநிலப் பகுதிகள் இழப்பு 60

காற்றின் தரம் 179

கடலில் பிளாஸ்டிக் கலப்பு 135

பருவநிலை மாற்றம் 165

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பு 136

வேளாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு 47

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com