குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் திருமண விருந்து சாப்பிட்ட 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு உட்கொண்ட 60-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2022, 6:24 am

DIN

மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு உட்கொண்ட 60-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி பிரஹலாத் சவான் கூறுகையில், 

புசாத் தாலுகாவுக்கு உள்பட்ட செம்பல்பிம்ப்ரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

திருமண விருந்து உண்ட பிறகு, பல விருந்தினர்களுக்கு அசௌகரியம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து, கிட்டத்தட்ட 40 முதல் 45 பேர் அண்டை மாநிலமான ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கல்மனுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

புசாட்டில் உள்ள பொது சுகாதார மையத்தில் 20-25 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும் சிலர் இங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். 

தற்போது நோயாளிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.