எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பிகார், தெலங்கானா, உ.பி.யில் ரயிலுக்குத் தீ வைப்பு! பதற்றம் அதிகரிப்பு

பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் ரயிலுக்குத் தீ வைத்தனர். 

News image

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீவைத்துக் கொளுத்தப்பட்ட ரயில்

Updated On :17 ஜூன் 2022, 1:42 pm IST

பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் ரயிலுக்குத் தீ வைத்தனர். 

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்  செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் விக்ரம்ஷீலா ரயில் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் விக்ரம்ஷீலா ரயில் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி - கௌகாத்தி ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு...

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி - கௌகாத்தி ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு...

நேற்று பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெரும்பாலான மாவட்டங்களில் ரயில்களுக்குத் தீ வைத்தனர். இதனால் ரயில் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இன்று தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் சம்பர்க்கிராந்தி ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில்

பிகாரில் லக்கிசராய் ரயில் நிலையத்தில்

அதுபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பலியாவில் ஒரு ரயிலுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் ரயில் முழுவதும் எரிந்தது. 

பிகார் - சப்ரா ரயில் நிலையத்தில்...

பிகார் - சப்ரா ரயில் நிலையத்தில்...

பிகாரில் இன்று மேலும் இரு ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் வடமாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட ரயில்... 

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட ரயில்... 

இந்த போராட்டத்தினால் நாடு முழுவதுமே பதற்ற சூழல் நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.