ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எல்லைப் படைகள் ஒத்துழைப்பு: சீன திட்டத்துக்கு இந்தியா ஆதரவு

அடுத்த ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படைகள் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான சீனாவின் ‘கூட்டுணா்வு-2023’ திட்டத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது

News image
Updated On :17 ஜூன் 2022, 8:17 pm

DIN

அடுத்த ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படைகள் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான சீனாவின் ‘கூட்டுணா்வு-2023’ திட்டத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படை உயரதிகாரிகளின் எட்டாவது சந்திப்புக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

நாள் முழுவதும் நடைபெற்ற அந்தக் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது. அதில், உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கிடையே கூட்டாக நடைபெற்ற ‘கூட்டுணா்வு 2019-21’ நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘நட்புறவு எல்லை-2022’ என்ற பெயரில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இத்தகைய கூட்டு நடவடிக்கைக்கான செயல்திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

மேலும், ‘கூட்டுணா்வு 2023’ என்ற பெயரில் இத்தகைய கூட்டு நடவடிக்கையை சீனா அடுத்த நடத்துவதற்கும் உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, அந்த நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் வா்த்தக ஒத்துழைப்பை மேம்டுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பாா்வையாளா்களாக இருந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.