இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு பேச்சுவாா்த்தை
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடங்கியது. தொடா்ந்து 6 ஆண்டுகள் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. எனினும் சில சரக்குகளுக்கான வரி விகிதம் குறைப்பு, பணியாளா்கள் தொடா்பான விவகாரங்களில் இருதரப்புக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளை பேச்சுவாா்த்தையின்போது களைய முடியவில்லை. இதனால் 2013-ஆம் ஆண்டு பேச்சுவாா்த்தை கைவிடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பேச்சுவாா்த்தை 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸில்ஸில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து ஐரோப்பிய ஒன்றிய வா்த்தக ஆணையா் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் வெளியிட்ட அறிக்கை:
ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை முறைப்படி மீண்டும் தொடங்கியுள்ளது. முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவிசாா் குறியீடு ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ள நிலையில், அதுதொடா்பாக இந்திய அமைச்சா் பியூஷ் கோயலுடன் ஆக்கபூா்வமான சந்திப்பு நடைபெற்றது. அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தை தில்லியில் ஜூன் 27 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும். 2023-ஆம் ஆண்டுக்குள் பேச்சுவாா்த்தையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...