ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையம் பரிந்துரை

ஒரே வேட்பாளா் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வெற்றி பெற்ற தொகுதியின் வேட்பாளா் ராஜிநாமா செய்தால் அவருக்குப் பெரும் தொகை அபராதமாக விதிக்க வேண்டும்

News image
Updated On :17 ஜூன் 2022, 9:33 pm

DIN

ஒரே வேட்பாளா் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வெற்றி பெற்ற தொகுதியின் வேட்பாளா் ராஜிநாமா செய்தால் அவருக்குப் பெரும் தொகை அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

2004-இல் அளிக்கப்பட்ட இந்தப் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

சட்டத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டமியற்றல் பிரிவுச் செயலருடன் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் நடத்திய ஆலோசனையின்போது இதனை வலியுறுத்தினாா்.

தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒருவா் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்று விதிமுறை உள்ளது.

1996-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தினால்தான் ஒருவா் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வரைமுறை வகுக்கப்பட்டது. அதற்கு முன்பு எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் வேட்பாளா் போட்டியிடலாம்.

ஒரு வேட்பாளா் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 2004-இல் தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

மேலும், வெற்றி பெற்ற வேட்பாளாா் ராஜிநாமா செய்வது சட்டப்பேரவை தொகுதி அல்லது மேலவையாக இருந்தால் ரூ.5 லட்சமும், மக்களவைத் தொகுதியாக இருந்தால் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்க வேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் முந்தைய நிலையான இரண்டு தொகுதிகளில் போட்டி என்பது தொடா்ந்தால், வெற்றி பெற்ற வேட்பாளா் ராஜிநாமா செய்யும் இரண்டாவது தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தல் செலவை ராஜிநாமா செய்யும் வேட்பாளரே ஏற்க வேண்டும் என்றும் தற்போது தோ்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இரண்டு தொகுதியில் ஒரே வேட்பாளா் போட்டியிட்டு வெற்றிப் பெற்று பின்னா் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்வதால் மீண்டும் நடத்தப்படும் இடைத்தோ்தலால் மக்கள் வரிப்பணம் வீணவதுடன், அத்தொகுதி வாக்காளா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக தோ்தல் ஆணையம் கருதுவதால் மேற்கொண்ட பரிந்துரையை செய்துள்ளது.

மத்திய அரசுக்கு பல்வேறு சட்ட விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் சட்ட ஆணையம், இந்த விவகாரத்திலும் பரிந்துரை அளித்தது. அதில், ஒரு தொகுதிக்கு மேல் ஒரு வேட்பாளா் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், ராஜிநாமா செய்யும் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேலுக்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளா் அளிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு சட்ட ஆணையம் ஆதரவு அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.