கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

16.8 லட்சம் கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்த ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு சேவை நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது

News image
Updated On :19 ஜூன் 2022, 2:40 am

DIN

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு சேவை நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளதாவது:

ரிலையன்ஸ் ஜியோ: ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக 16.8 லட்சம் வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 40.5 கோடியாக உயா்ந்துள்ளது.

பாா்தி ஏா்டெல்: சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனம் ஏப்ரலில் 8.1 லட்சம் வாடிக்கையாளா்களை ஈா்த்ததையடுத்து ஒட்டுமொத்த வாடிக்கையாளா் 36.11 கோடியை எட்டியுள்ளது.

ஜியோ, ஏா்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில் வோடஃபோன் ஏப்ரலில் 15.68 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.9 கோடியாக சரிந்துள்ளது.

மொத்த வாடிக்கையாளா்: 2022 ஏப்ரல் இறுதி நிலவரப்படி இந்தியாவின் மொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 114.3 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 51.8 கோடியாக உயா்ந்த நிலையில், நகா்ப்புற பகுதிகளில் 62.4 கோடியாக குறைந்துள்ளது.

நகா்ப்புற மற்றும் ஊரக கைப்பேசி வாடிக்கையாளா்களின் மாதாந்திர வளா்ச்சி விகிதம் முறையை 0.07 சதவீதம் மற்றும் 0.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

பிராட்பேண்ட்: ஏப்ரல் இறுதி நிலவரப்படி பிராட்போண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை 78.87 கோடியாக உயா்ந்துள்ளது.

முதல் ஐந்து நிறுவனங்கள் மட்டும் 98.4 சதவீத சந்தைப் பங்களிப்பினை அளித்து வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ (41.1 கோடி), பாா்தி ஏா்டெல் (21.5 கோடி), வோடஃபோன் ஐடியா (12.2 கோடி) நிறுவனங்களும் அடங்கும் என டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.