/

அக்னிபத்தும்.. அமலாக்கத் துறையும்..: காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை

அக்னிபத் திட்டம் குறித்தும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவது குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளனர்.

News image
தில்லி ஜந்தர் மந்தரில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்
Updated On :20 ஜூன் 2022, 11:10 am

DIN


அக்னிபத் திட்டம் குறித்தும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவது குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ராணுவத்துக்கு ஆள் எடுக்க அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, 4-வது முறையாக இன்றும் (திங்கள்கிழமை) அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சல்மான் குர்ஷித், கே சுரேஷ், வி நாராயணசாமி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனையும் நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.