அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 71 பேர் பலி

அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். 
அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 71 பேர் பலி
Updated on
1 min read

அசாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். 

அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கி எட்டு நாள்களாக பெய்த கனமழையால், மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  

கடந்த 24 மணி நேரத்தில், 33 மாவட்டங்களான பஜாலி, பக்சா, பர்பேடா, பிஸ்வநாத், போங்கைகான், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், திமா-ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், ஜோர்ஹத், கம்ரூப் (எம் காம்ரூப், ), கர்பி அங்லாங் மேற்கு, கரீம்கஞ்ச், கோக்ரஜார், லக்கிம்பூர், மஜூலி, மோரிகான், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர், டின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய நீர் அணையரகம் வெளியிட்டு தகவலின்படி, 

கோபிலி, தேஜ்பூர், சோனித்பூர், குவஹாத்தி கம்ரூபி கோல்பாரா துப்ரி, சுபன்சிரி, நாகோன் உள்பட பல ஆறுகளில் அபாய அளவை விட அதிகளவில் நிரம்பியுள்ளது. 

மத்திய அசாமின் நாகோன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தில் 2 காவலர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மொத்தம் 127 வருவாய் வட்டங்களும், 5,137 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

சுமார் 42,28,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,86,424 பேர் 744 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

இதுவரை 29,743 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கச்சார், டிமா-ஹசாவ், கோல்பாரா, ஹைலகண்டி, கம்ரூப் (எம்) மற்றும் கரீம்கஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ள நிலைமை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, துணை ஆணையர்கள் மற்றும் துணைப் பிரிவு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com