படித்து பணத்தை வீணாக்காதீர்: 'அக்னிபத்' குறித்து பாஜக எம்.எல்.ஏ. கருத்து

'அக்னிபத்' திட்டம் குறித்து அறியாமல் பொதுமக்கள் பட்டம் பெறுவதற்காக படித்து பணத்தை வீணாக்குவதாக பிகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷண் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரிபூஷண் தாக்குர்  (கோப்புப் படம்)
ஹரிபூஷண் தாக்குர் (கோப்புப் படம்)

'அக்னிபத்' திட்டம் குறித்து அறியாமல் பொதுமக்கள் பட்டம் பெறுவதற்காக படித்து பணத்தை வீணாக்குவதாக பிகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷண் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் வகையில் 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்திய ராணுவத்துக்கு 'அக்னிபத்' திட்டத்தின்கீழ் சோ்க்கப்படும் இளைஞா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படும். பின்னா் 25 சதவிகிதம் போ் மட்டுமே ராணுவத்தில் தொடரமுடியும். இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞா்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

'அக்னிபத்' திட்டத்துக்கு ஆதரவாக பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகிறனர். அவை அவ்வபோது சர்ச்சையையும் ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் பிகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷண் தாக்குர், 'அக்னிபத்' திட்டம் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது, ''தேசபக்திக்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் மட்டுமே 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக பேச முடியும். பல நாடுகளுல் ராணுவத்திற்கு சேவையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனில்லாத பட்டங்களைப் பெறுவதற்காக மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர். ஆனால் 'அக்னிபத்' திட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மற்ற பணிகளில் முன்னுரிமையும் அளிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com