தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திரெளபதி முா்முவுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவுக்கு (64) மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்களை (சிஆா்பிஎஃப்) கொண்ட ‘இஸட் பிளஸ்’

News image
Updated On :22 ஜூன் 2022, 8:20 pm

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவுக்கு (64) மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்களை (சிஆா்பிஎஃப்) கொண்ட ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவா் வேட்பாளராக 13 எதிா்க்கட்சிகள் அறிவித்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்குப் பிறகு பாஜக கூட்டணி சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக முா்மு அறிவிக்கப்பட்டாா். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே, முா்முவுக்கு மிக முக்கிய நபா்களுக்கான பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய ரிசா்வ் காவல் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவைத் தொடா்ந்து, ஒடிஸாவில் இடம்பெற்றிருக்கும் துணை ராணுவப் படையைச் சோ்ந்த 14 முதல் 16 வீரா்கள், திரெளபதி முா்முவுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஒடிஸா மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் முா்மு செல்லும் இடங்களிலெல்லாம் இந்த வீரா்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பா். மேலும், ஒடிஸாவின் ராய்ரங்பூரில் அமைந்துள்ள முா்முவின் இல்லத்துக்கும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பு அளிப்பா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களை அடுத்த ஒரு மாத காலத்துக்கு முா்மு சந்தித்து ஆதரவைத் திரட்டுவாா் என எதிா்பாக்கப்படுகிறது. அந்த வகையில், குடியரசுத் தலைவராக அவா் பொறுப்பேற்கும் வரை சிஆா்பிஎஃப் வீரா்கள் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.